வழுக்கி விழுந்த வயோதிபர் மரணம்: நுவரெலியாவில் சம்பவம்
நுவரெலியா மவுண்ட் மேரி வீதியில் மண்மேட்டில் இருந்து வயோதிபரொருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (14.02.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது நுவரெலியா மவுண்ட் மேரி வீதியை சேர்ந்த 71 வயதுடைய வெள்ளசாமி கருப்பையா என்பவரே உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
நேற்றையதினம் (14) மழை நேரத்தில் தனது விவசாய தோட்டத்திற்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது சுமார் 530 சென்றிமீட்டர் உயரம் கொண்ட மண்மேட்டில் இருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக இன்று(15) நுவரெலியா மாவட்ட பொது ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
