இலங்கைக்கு திரும்பிய 75 வயது முதியவர்.. அருண் ஹேமச்சந்திர வௌயிட்டுள்ள தகவல்
எமது நாட்டினை விட்டு வெளியேறி அகதி அந்தஸ்துடன் பிறநாட்டினில் தஞ்சமடைந்திருந்த நிலையில் அண்மையில் இலங்கைக்கு வருகைதந்த ஒருவர், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல கோணங்களில் பேசப்பட்டு வருகின்றன.
அது தொடர்பில் இன்று மாலை வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்டக் காரியாலயத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.
அகதி அந்தஸ்து
இதன்போது, வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு அகதி அந்தஸ்து கோரும் எம் நாட்டவர்கள் மீண்டும் நாடுதிரும்புவதை நாம் வரவேற்கின்றேம் என குறிப்பிட்டார்.

குறித்த விடயம் தொடர்பில் பரிசீலனை செய்வதற்கு தாம் கருத்துரையாடி வருவதாகவும் அதற்கு தேவையான சட்டமூலங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார். கூடிய விரைவில் அது தொடர்பிலான அறிவித்தல்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் குறித்த கைதுசெய்யப்பட்ட நபரது விடுதலை தொடர்பிலும் ஆராய்ந்து வருவதாகவும், அதற்கான பொறிமுறை குறித்தும் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 19 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri