வெளிநாடொன்றில் சிறுமிகளின் தாக்குதலுக்கு இலக்காகி முதியவர் பலி
வடக்கு லண்டனில் (London) இளம் சிறுமிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 75 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் (28) செவன் சிஸ்டர்ஸ் சாலையில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 14, 16 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பு
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 75 வயதுடைய முதியவர் சிறுமிகளின் கொடூரத் தாக்குதலுக்கு படுகாயமடைந்துள்ளார்.
இந்த நிலையில், படுகாயமடைந்த முதியவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (1) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
மேலும் ,இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமிகள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
