மட்டக்களப்பில் யானை தாக்கி வயோதிப விவசாயி பலி
மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஏரளக்குளம் பகுதியில் விவசாயி ஒருவர் மீது யானை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
வயலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த குறித்த விவசாயி மீது யானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்று (14) பகல் உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
ஏரளக்குளம் கருங்கன்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வைரமுத்து நல்லரெத்தினம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த விவசாயி சம்பவதினம் பிற்பகல் 11.00 மணிக்கு வயில் இருந்து வெளியேறி வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது அவர் மீது யானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போது வீதியில் உயிரிழந்துள்ளதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri
