பதின்ம வயது சிறுமியை தவறான நடத்தைக்குட்படுத்திய நபர் கைது
வடமராட்சி - கிழக்கு குடாரப்பு பகுதியில் பதின்ம வயது சிறுமியை தவறான நடத்தைக்குட்படுத்திய 65 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த கைது நடவடிக்கை நேற்று (24.10.2024) இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவான நிலையில் நீண்ட தேடுதலின் பின்னர் நேற்று (24) இரவு மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டில் தனியாக இருந்த சமயம் பார்த்து பக்கத்து வீட்டில் வசித்த குறித்த நபர் சிறுமியின் வீட்டில் நுழைந்து அவரை தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து, பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் சம்பவம் தொடர்பாக சிறுமி தெரியபடுத்தியதையடுத்து பெற்றோர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இதன் பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிறுமியை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் அதே பகுதியை சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரையும் தேடுதலின் பின் கைது செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த மருதங்கேணி பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 மணி நேரம் முன்

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
