பச்சை நிற ஐஸ் போதைப் பொருளுடன் மூதாட்டி கைது
தனமல்வில பிரதேசத்தில் பச்சை நிற ஐஸ் போதைப்பொருளுடன் மூதாட்டியொருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனமல்வில, அங்குனுகொலபெலஸ்ஸ - சூரியாரா பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று தனமல்வில பிரதேசத்தில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலாவது சந்தர்ப்பம்
மூதாட்டியை சோதனையிட்ட போது கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் பச்சை நிறத்தில் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் பச்சைநிற ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
அத்துடன் ஐந்து பாக்கெட்டுகளில் 5 கிராம் எழுபது மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் மூதாட்டியிடம் இருந்து பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூதாட்டி வெல்லவாய நீதவான் நீதிமன்றில் நாளை முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |