வயோதிப பெண் மீது மோதிய வான்: பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பு (Batticaloa) - கோட்டைக் கல்லாற்றில் வீதியைக் கடக்க முற்பட்ட வயதான பெண் ஒருவர் மீது வான் ஒன்று மோதியதில், குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சற்று முன் இடம்பெற்ற இச்சம்பவத்தில், விபத்தை ஏற்படுத்திய வான் சாரதி தப்பியோடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மட்டு கல்முனை பிரதான வீதி வழியே மட்டக்களப்பிலிருந்து மருதமுனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான், கோட்டைக் கல்லாறு பகுதியால் பயணிக்கும் போது கோட்டைக்கல்லாறு புத்தடிக் கோயிலுக்கு அருகாமையில் பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட வயதான பெண் மீது மோதியுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதன்போது, குறித்த பெண் படுகாயமடைந்ததுடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், விபத்தை ஏற்படுத்திய வானின் சாரதி வானைக் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் அவ்விடத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை, கோட்டைக் கல்லாறு பகுதியில் பலத்த மழை பெய்துகொண்டிருந்த சமயமே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri