ரஷ்ய - ஐரோப்பா எரிவாயு குழாயை தகர்த்த திட்டமிடும் அமெரிக்கா!
தமது நாட்டில் இருந்து, ஐரோப்பாவிற்கு எரிவாயுவை கொண்டு செல்லும் கடைசி குழாய் வழியை நாசப்படுத்த, அமெரிக்கா முயற்சிப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்(Sergey Lavrov) ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கலந்துக்கொண்டபோது இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தமது நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பில் "பயங்கரவாத" தாக்குதல்களை ஊக்குவிப்பதாகவும், டர்க்ஸ்ட்ரீமை(TurkStream), அதாவது ரஷ்யாவில் துருக்கிக்கு எரிவாயு எரிவாயுவை கொண்டுசெல்லும், குழாய்வழியை தகர்க்க முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எந்தத் துறையிலும் போட்டி
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
“எரிசக்தி உட்பட எந்தத் துறையிலும் போட்டியை அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிசக்தி ஸ்திரத்தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கில் பயங்கரவாத நடவடிக்கைகளை அவர்கள் பொறுப்பற்ற முறையில் ஆதரிக்கின்றனர்.
நோர்ட் ஸ்ட்ரீமின்
நோர்ட் ஸ்ட்ரீமின் எரிவாயு குழாய் தகர்ப்பு நாசவேலையைத் தொடர்ந்து டர்க்ஸ்ட்ரீமை முடக்க உக்ரேனிய பிரதிநிதிகளை அவர்கள் ஊக்குவிக்கிறார்கள்.
2024 ஆம் ஆண்டின் இறுதியில் காலாவதியான எரிவாயு போக்குவரத்து ஒப்பந்தத்தை உக்ரைன் புதுப்பிக்க மறுத்த பிறகு, இந்த குழாய் பாதையில்கொண்டுசெல்லப்படும் ரஷ்ய எரிவாயுவை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் கொண்டு செல்லும் கடைசி வழி இதுவாகும்.
இந்நிலையில், அந்தப் பாதையில் நிறுத்தம் ஏற்பட்டால் ரஷ்யாவுடனான ஐரோப்பிய ஒன்றிய ஒற்றுமையை மேலும் சீர்குலைக்கும்” என அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |