சாதாரண தரப்பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
2023 (2024) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் அழகியல் பாடத்துடன் தொடர்புடைய செயன்முறைப் பரீட்சைகள் 09.07.2024 முதல் 19.07.2024 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
இதில் 169,007 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அழகியல் பாடத்தின் இறுதிப்பெறுபேறுகள்
அழகியல் பாடத்தின் இறுதிப் பெறுபேறுகளை நிர்ணயம் செய்வதற்கு எழுத்து மூல பரீட்சை மற்றும் செயன்முறைப் பரீட்சை ஆகிய இரண்டிலும் பெறப்பட்ட மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுவதால் இதில் தோற்றுவது கட்டாயம் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டு பகுதிகளிலும் தோற்றாத பரீட்சார்த்திகளுக்கு அந்தப் பாடம் தொடர்பான பெறுபேறுகள் வழங்கப்படமாட்டாது எனவும் பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri