பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் 17 பேருடன் கடலில் மூழ்கிய எண்ணெய்க்கப்பல்
1.5 மில்லியன் லிட்டர் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால், சுற்றியுள்ள கடற்பகுதியில் பாரிய எண்ணெய் படலங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்த 17 பணியாளர்களில் 16 பேரை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.
தேடுதல் பணி
இந்நிலையில், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், குறித்த நபரை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எண்ணெய் கசிவு கண்டறியப்பட்டு அதனை இல்லாது செய்ய முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும், ஆனால் பலத்த காற்று மற்றும் அதிக அலைகள் அவற்றிற்கு இடையூராக இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கெய்மி சூறாவளி பருவகால பருவமழையை தீவிரமடைந்துள்ளதால் இந்த நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
