மன்னார் வளைகுடாவில் இருக்கும் எண்ணெய் வளம்: முதலீடு செய்ய தயாராக இருக்கும் நிறுவனங்கள்
மன்னார் வளைகுடாவில் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கனிய எண்ணெய் மற்றும் எரிவாயு சம்பந்தமாக முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்கள் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக எரிசக்தி அமைச்சர் மற்றும் அதிகார சபை கூறியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.
நீண்டகாலத்திற்கு முன்னர் மன்னார் வளைகுடாவில் இருப்பதாக கண்டறியப்பட்ட கனிய எண்ணெய் மற்றும் எரிவாயுவை அகழ்ந்தெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா? என இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இது சம்பந்தமான யோசனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அது தொடர்பான ஆய்வு அறிக்கையை சபையில் முன்வைத்து பணிகளை முன்னெடுத்துச் செல்ல உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதனடிப்படையில், மன்னார் கனிய வளம் தொடர்பான நடவடிக்கைகள் சரியான முறையில் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.



