ஹோர்முஸ் நீரிணை முடக்கம்! எண்ணெய் நெருக்கடிக்கு இராஜதந்திர நகர்வை நோக்கி நகரும் ஜப்பான்
ஈரான் போர் காரணமாக வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோகத் தடைகளைத் தொடர்ந்து, ஜப்பான் அரசு தனது மசகு எண்ணெய் விலை நிர்ணய முறையில் ஒரு முக்கிய மாற்றத்தைப் பரிந்துரைத்துள்ளது.
இதுவரை மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெயைச் சார்ந்திருக்கும் 'துபாய்' (Dubai) விலை நிர்ணய முறையைப் பின்பற்றி வந்த ஜப்பான், இனி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 'பிரெண்ட்' (Brent) முறைக்கு மாறுமாறு எரிபொருள் மொத்த விற்பனையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இராஜதந்திர நகர்வு
பெப்ரவரி 28 அன்று தொடங்கிய போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக, துபாய் மசகு எண்ணெய் சந்தையில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் நிலவுவதால், ஜப்பானின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த இராஜதந்திர நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம், ஜப்பான் தனது எண்ணெய் இறக்குமதியை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அப்பால் அட்லாண்டிக் மற்றும் ஆப்பிரிக்கப் பிராந்தியங்களுக்கு விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
பிரெண்ட் விலை நிர்ணய முறையானது சர்வதேச அளவில் பரவலாகப் பயன்படுத்தப்படுவதால், மாற்று நாடுகளிடமிருந்து எரிபொருளைப் பெறுவது எளிதாகும் என ஜப்பான் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சகம் (METI) தெரிவித்துள்ளது.
போர்க்காலச் சூழலில் நிலவும் விலை ஸ்திரத்தன்மையற்ற நிலையைச் சமாளிக்கவும், நுகர்வோருக்கு ஏற்படும் கூடுதல் சுமையைக் குறைக்கவும் இந்தத் திட்டமிடப்பட்ட மாற்றம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.