அமெரிக்காவிலிருந்து எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தம்! உறுதிப்படுத்திய அரசாங்கம்
அமெரிக்காவுடனான எண்ணெய் மற்றும் மேம்பட்ட இயந்திரங்கள் போன்ற முக்கிய இறக்குமதிகளுக்கு அதிக போட்டி விலைகளைப் பெறுவதற்கான வழிகளை இலங்கை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
இதன்படி எரிசக்தி, தொழில்துறை மூலப்பொருட்கள் மற்றும் மேம்பட்ட இயந்திரங்களின் நிகர இறக்குமதியாளராக, இலங்கை ஏற்கனவே சர்வதேச அளவில் இந்தப் பொருட்களை ஆராய்ந்து வருகிறது.
எனவே, இலங்கையின் சந்தையை கட்டுப்பாடற்ற மற்றும் பாகுபாடற்ற முறையில் எவ்வாறு திறக்க முடியும் என்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க விநியோகஸ்தர்
தற்போதைய விவாதங்கள் செலவுகளைக் குறைப்பதற்கும் அமெரிக்க விநியோகஸ்தர்களின் அணுகலை மேம்படுத்துவதற்கும் வாய்ப்புகளை அடையாளம் காண்பதில் இலங்கை கவனம் செலுத்தியுள்ளது.
எரிசக்தித் துறை விரிவாக பரிசீலிக்கப்படும் ஒரு பகுதி என்பதை உறுதிப்படுத்திய நிலையில், அமெரிக்காவுடனான தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் பிராந்திய வர்த்தக ஓட்டங்களிலிருந்து இலங்கை பயனடைவதற்கான திறனை மதிப்பிடும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் இந்தப் பிராந்தியத்தை நோக்கி ஏராளமான ஏற்றுமதிகள் வரவிருப்பதால், இலங்கை பயனடையவும் சிறந்த இலாபங்களை பெறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.




