உடன் தொடர்பு கொள்ளுங்கள்.. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
பொதுப்போக்குவரத்து தொடர்பான பயணிகளின் கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் முறைப்பாடுகளை சேகரிக்க இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஒரு புதிய பொறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பான மற்றும் திறமையான பொதுப் போக்குவரத்து சேவைகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி இருப்பதாக SLTB தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குலதிலக்க தெரிவித்தார்.
தொடர்பு கொள்ள..
SLTB சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகள் இப்போது பின்வரும் தளங்கள் மூலம் புகார்களைப் பதிவு செய்யலாம் மற்றும் அவர்களின் பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்:
வாட்ஸ்அப்: 0704775030
ஹொட்லைன்: 1958
வலைத்தளம்: www.sltb.lk அல்லது http://www.sltb.lk
இந்த முயற்சி பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் சேவை தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





