மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தை தேடி சென்ற அதிகாரிகள்!
விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள, மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரம் மற்றும் நீர் கட்டண நிலுவை தொகை காரணமாக அவற்றினை துண்டிக்க அதிகாரிகள் சென்றதாக தெரியவந்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள் நீர் இணைப்பை துண்டிக்க அங்கு சென்றிருந்ததாகவும் ஒரு இலட்சம் ரூபாய் நிலுவைத் தொகை காரணமாக மின்சார வாரியமும் மின்சார இணைப்பை துண்டிக்க அங்கு சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியாளர்கள் மட்டுமே அங்கு இருந்ததால், மின்சாரம் மற்றும் நீர் இணைப்பை துண்டிக்காமல் அதிகாரிகள் திரும்பி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து விசாரித்த போது, அந்த வீட்டிற்கு 6 இலட்சம் ரூபாய் நிலுவைத் தொகை இருப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய லங்காசிறியின் விசேட செய்தி தொகுப்பு இதோ...,





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

சன் டிவி சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ், இனி ஜாலி தான்... என்ன விஷயம் தெரியுமா? Cineulagam
