விபத்துக்குள்ளான பேருந்தை ஆய்வு செய்த அதிகாரிகள்
எல்ல - வெல்லவாய பிரதான வீதியின் 12ஆவது மைல்கல் பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் சிதைவுகளை நேற்று(09) கொழும்பு மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள தலைமை அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் விசேட குழுவால் இந்த சோதனை நடத்தப்பட்டது.
உதவி ஆணையர்(தொழில்நுட்பம்) அநுர பதிகம, தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் பிரபாத் ராஜதேவ, தலைமை மோட்டார் வாகன பரிசோதகர்கள் நிஷாந்த ஹெட்டியாராச்சி(கண்டி), ஜாலிய பண்டார (நுவரெலியா), ஹசித ரந்தெனிய (குருணாகல்), ஹசித் குலதுங்க (கேகாலை) மற்றும் பதுளை தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் (பதுளை) நுவான் சாமிகர கரவிட்ட ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டை உலுக்கிய விபத்து
தங்காலை நகர சபை ஊழியர்கள் குழு ஒன்று, அவர்களது குடும்பத்தினருடன், நுவரெலியா பகுதியில் சுற்றுலா சென்றுவிட்டு, எல்ல-வெல்லவாய பிரதான வீதி வழியாக தங்காலைக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, கடந்த 4ஆம் திகதி இந்த விபத்து நிகழ்ந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam