இலங்கையின் இராணுவ தளபதி இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள அதிகாரபூர்வ பயணம்
இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.கே.ஜி.எம். லசந்த ரொட்ரிகோ, இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இவர், நேற்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
உயர்மட்ட சந்திப்புகள்
இந்த பயணம், இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், குறிப்பாக பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்தின் முதல் நாள் புதுடில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் அவர் மலர்வளையம் வைக்கும் நிகழ்வில் பங்கேற்றார்.
இதனையடுத்து அவருக்கு முறையான மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்திய இராணுவத்தின் இராணுவத் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ் ராஜா சுப்ரமணியுடனும் ஏனைய அதிகாரிகளுடனும் உயர்மட்ட சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
