சர்வகட்சி கூட்டம் தொடர்பில் வெளியான விசேட அறிவித்தல்!
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கும் சர்வகட்சி கூட்டம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெரும் சர்வகட்சி கூட்டம் நாளைய தினம்(26.07.2023) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுக்கு இந்த கூட்டத்திற்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13வது திருத்தம்
இதற்கமைய கடந்த வாரம் ஜனாதிபதி இந்தியாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்நிலையில் இரு தலைவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளில் தமிழர்கள் பிரச்சினை முக்கிய விடயமாக காணப்பட்டது.
இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இந்தியப் பிரதமர் இதன் போது எடுத்துரைத்தார்.
தனது இந்திய விஜயத்திற்கு முன்னதான, தமிழ் கட்சிகளுடனான சந்திப்பில், மாகாண சபைகளின் பாதுகாப்பு அதிகாரங்கள் இன்றி 13வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என ரணில் உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி, ரணிலுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைபடுத்தவும், மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் இலங்கைத் தலைவர் உறுதியுடன் இருப்பார் என்று நம்பிக்கையை மோடி வெளியிட்டிருந்தார்.
மேலும், தமிழர்களுக்கு மரியாதை மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
