அரச அதிகாரிகளுக்கான தொலைபேசி கொடுப்பனவுகள் குறைப்பு!
அரசாங்கம், வரவுசெலவுத்திட்ட தீர்மானங்களை கடைப்பிடித்து இந்த மாதம் முதல் அரசுக்கு சொந்தமான நிறுவன அதிகாரிகளின் தொலைபேசி கட்டண கொடுப்பனவுகளை குறைத்துள்ளது.
அதன்படி, சபைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் உள்ள அதிகாரிகளின் தொலைபேசி கட்டணங்கள் 25 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக .13,000 ரூபாவை தொலைபேசி கட்டண உதவித்தொகையாக பெற்ற அதிகாரி ஒருவர் புதிய முறைப்படி 9,750 ரூபாவை மாத்திரமே பெறுவார்.
தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக பணிப்பாளர், நிர்வாக பணிப்பாளர், பொது மேலாளர் ஆகியோருக்கு முன்னர் 10ஆயிரம் ரூபா வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது, 7500 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தலைமை நிதி அதிகாரி, தலைமைச் செயல்பாட்டு அதிகாரிகள் முன்னர் 9ஆயிரம் ரூபாவை பெற்று வந்த நிலையில், குறைப்பின்படி 6750ரூபாவை பெறுவார்கள்.
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri