இலங்கையில் சர்வதேச நிறுவனங்களின் அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என எச்சரிக்கை
மட்டக்களப்பு - மயிலத்தனையில் மதுறு ஓயா திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் சிங்கள மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு சர்வதேச உதவி நிறுவனங்கள் துணை போகக் கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரியுள்ளார்.
அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் தமிழின பகுதியை சிங்களமயமாக்கும் நடவடிக்கைகளுக்கு துணை போனால் நிதி வழங்கிய சர்வதேச நிறுவனங்களின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராடுவோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை செல்லப்பிள்ளையாக கருதி சர்வதேச நாடுகள் காப்பாற்றும் அதேநேரத்தில் அவரது ஆட்சியின் கீழ் இனவாத தமிழின விரோத செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்ற யதார்த்தத்தையும் உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,




