கைதி ஒருவரை வெளி இடத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள்! முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை
அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குச் சொந்தமான பேருந்தில், கைதி ஒருவர் மற்றும் கைதியின் குடும்ப உறுப்பினர்கள் வெளிஇடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பில் சிறைச்சாலையில் பணியாற்றிய இரண்டு சிறை அதிகாரிகள் மற்றும் ஒரு சிறைச்சாலை ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெலிகம நகருக்கு வெளியே உள்ள இடத்திற்கு குறித்த தரப்பினரை அழைத்து செல்லப்பட்டமையை தொடர்ந்து பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த 16 ஆம் திகதி நடந்ததாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இந்த பணிநீக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புலம்பெயர் தமிழர்கள் மீது அச்சத்தில் ஜனாதிபதி..! இராணுவத்தினரையும் புறக்கணித்ததாக விமல் குற்றச்சாட்டு
மேலதிக விசாரணை
வெலிகம தொடருந்து நிலையம் அருகே சிறைச்சாலைப் பேருந்தானது ஒரு கைதியுடன் நின்றதாகவும், இதன்போது சிறைச்சாலை அதிகாரிகள் கைதியை பேருந்தில் விட்டுவிட்டு, நகரத்தில் உள்ள கடைகளுக்குச் சென்று சில பொருட்களை வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் பேருந்து அந்த இடத்தை விட்டுச் சென்றதாக கூறிய அதிகாரி, குறித்த நேரத்தில் சிறைச்சாலை பேருந்தில் ஒரு பெண்ணும் ஒரு சிறு குழந்தையும் இருந்ததாக தகவல்கள் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
