யாழில் அரச அதிகாரிகள் மேற்கொண்ட அசமந்த போக்கான செயல்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படுவதாக கூறி பல வருடங்கள் பழமை வாய்ந்த வேப்பமரம் சில நாட்களுக்கு முன்பு மரக் கூட்டுத்தாபனத்தால் வெட்டி அகற்றப்பட்டது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் மரக் கூட்டுத்தாபனம் சில நாட்களுக்கு முன்பு குறித்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டது.
விபத்து ஏற்படும் ஆபத்து
வேப்ப மரத்தை வெட்டி எடுத்துச் சென்றதுடன் மிகுதியான சில பகுதிகளை மரக்கூட்டுத்தாபனம் அசண்டையாக நடுவீதியில் விட்டு சென்றுள்ளது.
மரத்தின் மேல் பகுதிகள் அகற்றப்பட்ட போதும் அடிப்பகுதி அகற்றப்படாமல் பாதுகாப்பற்ற முறையில் காணப்படுவதாலும், விட்டுச் சென்ற மரத்துண்டுகள் நடுவீதியில் காணப்படுவதாலும் விபத்துக்கள் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.
மரம் வெட்டப்பட்ட போது அகற்றப்பட்ட ஏனைய பாகங்களும் வீதி அருகாமையில் பாதுகாப்பற்ற முறையில் காணப்படுகின்றது. எனவே அதிகாரிகளின் அசமந்த போக்கை மக்கள் கண்டித்ததுடன் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
