யாழில் இலஞ்சம் பெற முயன்ற அதிகாரிகள் மூவர் கைது!
இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் - சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின் கீழ் இயங்கும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் மாதகல் பகுதியில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு மதுவரித் திணைக்கள அதிகாரிகள் முயற்சித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால்
பின்னர் அவரை கைது செய்யாமல் விடுவதற்காக குறித்த அதிகாரிகள் மூவரும் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரியுள்ளனர்.
போதைப்பொருளை வைத்திருந்தவர் 20 இலட்சம் ரூபாய் இலஞ்சம் வாங்குவதாக ஒத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவர்கள் சந்தேக நபரை விட்டுவிட்டு இலஞ்சப்பணத்தினை சித்தங்கேணி பகுதியில் உள்ள மதுவரித் திணைக்கள அலுவலகத்திற்கு கொண்டு வருமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார்கள்.
போதைப்பொருள் வைத்திருந்தவரின் தரப்பினர் இதுகுறித்து காங்கேசன்துறை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கிவிட்டு இலஞ்சத்தை கொடுப்பதுபோல் பாசாங்கு செய்வதற்காக அவர்களது அலுவலகத்துக்கு சென்றுள்ளனர்.
அங்கு இலஞ்சத்தை கொடுப்பதற்கு முயற்சித்தவேளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால், மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அதிகாரிகள் மூவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவர்கள் மூவரும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 14 மணி நேரம் முன்

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam
