திறமையற்ற வகையில் செயற்படும் அதிகாரிகள்! ஜனாதிபதி எடுக்கவுள்ள நடவடிக்கை?
எதிர்வரும் வாரங்களில் பல அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களை மாற்றுவதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கவனம் செலுத்தியுள்ளார்.
மெதுவாகவும், திறமையற்ற வகையிலும் செயற்பட்டு வரும் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களை மாற்றுவது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு மாற்றப்பட வேண்டிய அதிகாரிகளில் முக்கிய அமைச்சின் செயலாளர் ஒருவர் இருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான வங்கி மற்றும் வெளிநாடு தொடர்பான நிறுவனத்தின் தலைவர் பதவியிலும் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 14 மணி நேரம் முன்

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam
