பெண் பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய சக பொலிஸ் அதிகாரி கைது
பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முல்லேரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முல்லேரியா பிரதேசத்தில் அழகுக்கலை நிலையமொன்றை ஆரம்பித்துள்ளார்.
அதற்காக அவர் தனது காதலியான பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் இருந்து ஒரு தொகைப் பணத்தையும் கடனாகப் பெற்றுக் கொண்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
பணியில் இருந்து இடைநிறுத்தம்
இந்நிலையில் கடன் தொகை மீளச் செலுத்தல் தொடர்பில் அழகுக்கலை நிலையத்தில் வைத்து இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பின் பொலிஸ் உத்தியோகத்தர், தன் காதலியான பெண் பொலிஸ் உத்தியோகத்தரை கடுமையாக தாக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முல்லேரியா பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் தாக்குதல் நடத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பணியில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் முல்லேரியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
