தொடருந்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
தொடருந்து ஆசன முன்பதிவு மற்றும் முன்பதிவுக் கட்டண மீளளிப்பு தொடர்பில் தொடருந்து திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2025.01.01 ஆம் திகதி முதல், முன்பதிவு செய்யப்பட்ட ஆசன பயணச் சீட்டுக்கான பணத்தை மீளளிப்பு செய்யக் கோரும் போது, பயணியின் தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டின் பிரதியானது தொடருந்து நிலையத்திற்கு சமர்ப்பிக்கப்படுவது கட்டாயமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள்
இதனூடாக பயணச் சீட்டில் குறிப்பிடப்பட்ட தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண் உறுதி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை தொடருந்து ஆசன முன்பதிவின் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்று தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தொடருந்து நிலையத்திற்குள் நுழையும் போதும், தொடருந்தில் பயணச்சீட்டு பரிசோதனை செய்யும் போதும், பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணை சரிபார்த்து உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri
