கொரோனா தொற்றுக்குள்ளான சுகாதார அமைச்சரின் தற்போதைய நிலை!
கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐடிஎச் வைத்தியசாலையின் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பிரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அவர்கள் யாருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், சிகிச்சை நிலையத்திலிருந்த சுகாதார அமைச்சர் கடந்த வாரம் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையின் தீவில சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டிருந்தார்.
அவர் ஐடிஎச் வைத்திசாலைக்கு மாற்றப்படும் போது சுவாசிப்பதற்கு சிரமப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 18 மணி நேரம் முன்

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
