மேல் மாகாணத்தில் டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம்
மேல் மாகாணத்தில் நாளை(26.04.2023) முதல் டெங்கு தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்று (24.04.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் தொற்றாளர்கள்
மேலும் அவர் தெரிவிக்கையில்,''ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 17,728 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் இவ்வருடத்தில் இதுவரையில் இருபத்தி ஏழாயிரத்து எண்ணூற்று பதினான்கு(27814) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதற்கமைய மேல் மாகாணத்தின் கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களிலே அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தற்போது DEN 2 மற்றும் DEN 3 வைரஸ்கள் அதிகளவில் பரவி வருகின்றன.”என தெரிவித்துள்ளார்.
இதேவேளை டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.