இப்ராஹிமி பள்ளிவாசல் அதிகாரங்களை பறித்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு
ஆக்கிரமிக்கப்பட்ட ஹெப்ரான் நகரில் அமைந்துள்ள இப்ராஹிமி பள்ளிவாசல் திட்டமிடல் மற்றும் கட்டுமான அதிகாரங்களை பாலஸ்தீன நகராட்சியிடமிருந்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு பறித்துள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) எடுத்துள்ள இந்த முடிவின்படி, பள்ளிவாசல் தொடர்பான அனைத்து அதிகாரங்களும் இனி இஸ்ரேலிய சிவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்.
தன்னிச்சை கட்டுமான பணி
ஹெப்ரான் நகராட்சியின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பள்ளிவாசல் முற்றம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இஸ்ரேல் தன்னிச்சையாகக் கட்டுமான பணிகளை மேற்கொள்ள இந்த நடவடிக்கை வழிவகுக்கும்.

குறிப்பாக, பள்ளிவாசலில் முற்றத்தில் கூரை அமைக்கும் (Roofing Project) சர்ச்சைக்குரிய திட்டத்தை முன்னெடுக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த "ஆபத்தான நடவடிக்கையை" ஹமாஸ் அமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. இது பள்ளிவாசல் முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அதன் இஸ்லாமிய அடையாளத்தை மாற்றும் முயற்சி என்று ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது.
பாலஸ்தீன தரப்பு விடுத்துள்ள கோரிக்கை
ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ (UNESCO), அரபு லீக் மற்றும் சர்வதேச அமைப்புகள் உடனடியாகத் தலையிட்டு பள்ளிவாசலை பாதுகாக்க வேண்டும் என்று பாலஸ்தீன தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இப்ராஹிமி பள்ளிவாசல் மற்றும் ஹெப்ரான் பழைய நகரம் ஆகியவை யுனெஸ்கோவின் (UNESCO) உலக பாரம்பரியப் பட்டியலில் "ஆபத்தில் உள்ள இடங்களாக" வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இஸ்ரேலின் தற்போதைய நடவடிக்கை பள்ளிவாசலின் வரலாற்று மற்றும் கலாசாரத் தன்மையைப் பாதிக்கும் என மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கின்றன.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 2 மணி நேரம் முன்
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam