வடக்கில் மற்றுமொரு பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட மன்னகுளம் பகுதியில் பழைய செங்கல் இடிபாடுகளுடன் கூடிய பௌத்த வழிபாடு இடம்பெற்றமைக்கான ஆதாரம் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச செயலகம் 255 B கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட மன்னகுளம் பகுதியில் தொல்பொருள் சின்னங்களை கொண்ட ஒரு தளம் காணப்படுவதாக சிங்க ரெஜிமென்டின் 16 வது படைபிரிவின் கட்டளை அதிகாரியின் அறிவிப்பை தொடர்ந்து வவுனியா தொல்பொருள் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த பகுதியில் 60-70 செ.மீ உயரத்திற்கு இடைப்பட்ட 12 கற் தூண்களை கொண்ட கட்டிட அமைப்பும் அதில் சிங்கள எழுத்தினால் பூஜை தொடர்பாக எழுதப்பட்டிருப்பதாகவும், கி.மு 8,9 ஆம் நூற்றாண்டுகளுக்குரியது எனவும், அங்கு பழைய கட்டிடங்களுக்கான செங்கல் மற்றும் ஒடுகள், இருப்பதாகவும், இக்கட்டிடம் 50 சதுர மீற்றர் பரப்பளவை கொண்டதாக இருந்திருக்கலாம் எனவும் தாெல்லியல் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வவுனியா வடக்கில் வெடுக்குநாறிமலை, கோடலிபறிச்சான் என தாெடர்ந்து தற்போது மன்னகுளம் பகுதியையும் தாெல்லியல் திணைக்களம் உரிமை கோரியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.











6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 23 நிமிடங்கள் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
