உத்தியோகபூர்வ இலக்கத்தகடு இல்லாத வாகன உரிமையாளர்களுக்கான அறிவிப்பு
உத்தியோகபூர்வ வாகன இலக்கத்தகடு பெறாத வாகன உரிமையாளர்கள் எரிபொருள் நிரப்பும்போது தங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதன்படி வருமான வரி உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ், காப்புறுதி அல்லது வாகனப் புகைப் பரிசோதனைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
உத்தியோகபூர்வ வாகன இலக்கத் தகடுகள்
கொள்முதல் நடவடிக்கைகளில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் கடந்த காலங்களில் உத்தியோகபூர்வ வாகன இலக்கத் தகடுகள் விநியோகிக்கப்படாத நிலை காணப்படுகிறது.

இதன் காரணமாகச் சில வாகன உரிமையாளர்கள் பல்வேறு வகையான இலக்கத் தகடுகளைப் பயன்படுத்த முற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்ககள் தெரிவிக்கின்றன.
எனவே, எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும்போது வாகனத்தின் அடையாளத்தைத் துல்லியமாக உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, தேவையான சந்தர்ப்பங்களில் குறித்த ஆவணங்களில் ஒன்றினைச் சமர்ப்பிக்குமாறு வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam