பரீட்சார்த்திகளின் மோசமான செயல் : விசாரணைகளை ஆரம்பித்த குற்றப்புலனாய்வு
இந்த நாட்களில் நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு செய்யவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள இரண்டு பரீட்சை நிலையங்களிலும் ஹசலக்க பிரதேசத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றிலும் இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நேற்று நடைபெற்ற ஆங்கில பரீட்சையின்போது சில பரீட்சார்த்திகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி ஆங்கில வினாத்தாள்களை புகைப்படங்கள் எடுத்து மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்துகொண்டு விடைகளைப் பெற முயற்சித்துள்ளது தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள்
இதனையடுத்து குறித்த நேரத்தில் பரீட்சை நிலையங்களில் இருந்த அதிகாரிகளினால் கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர், பரீட்சை நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |