புதுக்குடியிருப்பில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தாயாரின் இரண்டாவது கணவன்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில். பதின்ம வயது சிறுமியினை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தயாரின் இரண்டாவது கணவன் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
குறித்த சிறுமி வெளிமாவட்டத்தில் விடுதியில் நின்று கல்வி கற்று வந்துள்ளார். விடுமுறையில் வீட்டிற்கு வந்த நிலையில், தாயாரின் இரண்டாவது கணவனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய கடந்த 28.02.2022 அன்று 36 வயதுடைய குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட மனைவியின் இரண்டாவது கணவன்
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது, அவரை எதிர்வரும்
15.03.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
