நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
சர்வதேச கிரிக்கட் பேரவையின் 2026ம் ஆண்டுக்கான உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுக் கொண்டுள்ளது.
இந்தியாவின் கொல்கொத்தாவில் அமைந்துளள் ஈர்டன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்க அணியை 9 விக்கெட்களால் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றியீட்டியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய நியுசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீா்மானித்தது.

இதன்படி களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட் இழப்பிற்கு 169 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
மர்க்கோ ஜென்சன் 55 ஓட்டங்களையும், டெவில்ட் பிரிவில்ஸ் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் மெட் ஹென்ரி, கூலி மெக்னொச்சி மற்றும் ராச்சின் ரவீந்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 12.5 ஓவர்களில் வெற்றி இலக்கினை எட்டி அபார வெற்றியை பதிவு செய்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுக்கொண்டுள்ளது.
இதில் பின் எலன் 33 பந்துகளை எதிர்கொண்டு 8 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் அடங்களாக 100 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டு அணியை வெற்றிப் பாதைக்கு நகர்த்தியிருந்தார்.
ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் வீரர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதி வேகமான சதமாக இந்த சதம் கருதப்படுகின்றது.
நாளைய தினம் நடைபெற உள்ள இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றியீட்டும் அணி நியுசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam