தலவாக்கலை - ஹட்டன் தனியார் பேருந்து சாரதிகள் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு
தலவாக்கலை - ஹட்டன் பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஊழியர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த (30) ஆம் திகதி மாலை நுவரெலியா - தலவாக்கலை பேருந்து சாரதிக்கும் நுவரெலியா - ஹட்டன் சொகுசு பேருந்து சாரதியிடையே தனிப்பட்ட முறையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
பின்னர் அது கைகலப்பாக மாறி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தீடீர் பணிப்பகிஷ்கரிப்பு
இந்நிலையில், அன்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் இரண்டு பேருந்துக்களின் முன் பக்கம் உள்ள கண்ணாடிகள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக நேற்று(01) காலை முதல் நுவரெலியா - தலவாக்கலை தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தீடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு ஆதரவாக தலவாக்கலை - ஹட்டன் பிரதான வீதியில் சேவையில் ஈடுபாடும் தனியார் பேருந்து ஊழியர்களும் இன்று இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு நேற்றைய தினம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த தனியார் பேருந்து சாரதிகளும் நடத்துனர்களும் இணைந்து சேவையில் ஈடுபட்ட நுவரெலியா - ஹட்டன் சொகுசு பேருந்துகளுக்கும் அதில் பயணம் செய்த பயணிகளுக்கும் லிந்துலை மற்றும் தலவாக்கலை பகுதிகளில் நடுவீதியில் தடுத்து நிறுத்தப்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டி அராஜகமாக செயல்பட்டதாக தெரிவித்து இன்று(02) நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்து சாரதிகளும் நடத்துனர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
குறித்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பேருந்து பயணங்களை மேற்கொள்ளும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 13 மணி நேரம் முன்

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam
