நானுஓயாவில் கோர விபத்து! பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் படுகாயம் - சாரதி கைது

Sri Lanka Police Nuwara Eliya Sri Lanka Police Investigation Accident
By Thiva Mar 31, 2026 06:02 AM GMT
Report

நுவரெலியா - ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேருந்து சக்கரத்தில் சிக்கிய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

 

விபத்துக்கான காரணம்

 தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேருந்தில்  ஏறுவதற்கு முற்பட்ட வேளையில் மிதிபலகையிலிருந்து தவறி விழுந்த பெண் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நானுஓயாவில் கோர விபத்து! பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் படுகாயம் - சாரதி கைது | Nuwaraeliya Nanuoya Accident 

குறித்த பேருந்தின் மிதிபலகையில் ஒரு காலினை வைத்து ஏறும் போது தவறுதலாக வீதியில் வீழ்ந்துள்ளனர். இதன்போது பெண்ணின் மீது பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி இரு கால்களும் நசுங்கி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது .

இவ்விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தினமும் ஹட்டன் முதல் நுவரெலியா வரை சேவையில் ஈடுபடும் பேருந்து இன்றைய (31) தினம் இயங்கவில்லை எனவும், இதனால் குறித்த பேருந்து தலவாக்கலையில் இருந்து புறப்படும் போதே அதிக பயணிகள் இருந்துள்ளனர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு 

இதனால் நானுஓயா டெஸ்போட் பகுதியில் பேருந்தினை நிறுத்தாமல் பாரிய வளைவு ஒன்றில் பேருந்தினை மெதுவாக இயக்க முற்பட்டபோது குறித்த பெண் பேருந்தினை நிறுத்துவதாக நினைத்து பேருந்தில் ஏறுவதற்கு முயன்ற போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.

நானுஓயாவில் கோர விபத்து! பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் படுகாயம் - சாரதி கைது | Nuwaraeliya Nanuoya Accident

குறித்த வீதியில் பேருந்து சேவை உரிய முறையில் ஈடுபடாமையே குறித்து விபத்துக்கு காரணம் என பொதுமக்களும் குற்றம் சுமத்துகின்றன.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தீவிரமடையும் பதற்றத்தினால் மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்! நூற்றுக்கணக்கான விமானங்கள் தொடர்ச்சியாக இரத்து

தீவிரமடையும் பதற்றத்தினால் மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்! நூற்றுக்கணக்கான விமானங்கள் தொடர்ச்சியாக இரத்து

உலகின் மிகப்பெரிய அலுமினிய ஆலை மீதான அதிரடி தாக்குதல்! வரலாற்று உச்சத்தை எட்டிய அலுமினியத்தின் விலை

உலகின் மிகப்பெரிய அலுமினிய ஆலை மீதான அதிரடி தாக்குதல்! வரலாற்று உச்சத்தை எட்டிய அலுமினியத்தின் விலை



GalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US