நுவரெலியா வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம்
ஒவ்வொரு வருடமும் நுவரெலியாவில்(Nuwara Eliya) நடத்தப்படும் வசந்த கால நிகழ்வுகள் இன்று காலை நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக மிகவும் கோலாகாலமாக ஆரம்பித்துவைக்கப்பட்டன.
நுவரெலியா மாநகர சபை ஏற்பாட்டில் நுவரெலியா மாநகர சபை விசேட ஆணையாளர் சுஜீவ போதிமான தலைமையில் ஆரம்பமான நிகழ்வுகள் இம்மாதம் 30 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
வசந்த கால விழா
தொடர்ந்து வரும் நாட்களில் மலர் கண்காட்சி, படகோட்டம், கார் பந்தய ஓட்டப் போட்டி, குதிரைப்பந்தயம், கிரிக்கெட் சுற்றுப் போட்டி, உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி, கிறகரி வாவியில் நீர் விளையாட்டு, சேற்றில் மோட்டார் ஓட்டம், மோட்டார் சைக்கிள் தடைதாண்டல் போட்டி மற்றும் நாள்தோறும் இசை நிகழ்ச்சிகள் என களியாட்ட விழாக்களும் இந்த வசந்த கால விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா, பொருளாதார நெருக்கடி , எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக உள்நாட்டு ,வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையின்றி மந்த நிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri