லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டது: சற்று முன் வெளியான புதிய அறிவிப்பு
லிட்ரோ எரிவாயு (Litro Gas) எரிவாயுவின் விலை இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் (Muditha Peiris) தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயுவின் புதிய விலைகள்
12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 135 ரூபா குறைக்கப்படும் நிலையில் புதிய விலை 4115 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூபா 55 குறைக்கப்பட்டுள்ளது. எனவே அதன் புதிய விலை 1,652 ரூபாவாகும்.
மேலும், 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 23 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 772 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஏப்ரல் மாதத்தில் சமையல் எரிவாயுவின் விலைகளில் மாற்றம் செய்யப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளதாக முன்னதாக செய்தி வெளியாகியிருந்தது.
அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய நன்மைகளை மக்களுக்கு வழங்க முடியுமா என ஆராய்ந்து வருவதாக அவர் கூறியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 22 மணி நேரம் முன்

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan
