நுரைச்சோலை கடத்தல் விவகாரம்! சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
நுரைச்சோலையில் ஒருவரைக் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ கெப்டன் மற்றும் இராணுவத்தின் மூன்று உறுப்பினர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர்களை ஜூலை 12 வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இராணுவ உடையை ஒத்த சீருடை அணிந்த 4 ஆண்களும் ஒரு பொதுமகனும் நுரைச்சோலையில் குடியிருப்பாளரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய பின்னர், ஜூன் 30 அன்று கடற்கரையோரத்தில் கடத்திச் சென்றனர்.
இது தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளானவரான 38 வயதான ராஜா ஸ்ரீ காந்தனின் மனைவி காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் இராணுவத்தினருக்கு அறிவித்த நிலையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.





போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam
