மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளிக்காட்ட எதிர்க்கட்சிகள் தீர்மானம்
எதிர்வரும் நாட்களில் மின்கட்டண அதிகரிப்பொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ள சூழ்நிலையில் அதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பினை வெளிக்காட்ட எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
அதன் பிரகாரம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமன்றி ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன( மொட்டுக் கட்சி), சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் முக்கியஸ்தர்கள் இது தொடர்பில் தங்களுக்குள் பல்வேறு பட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.
மின் கட்டண அதிகரிப்பு
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கத்தின் செல்வாக்கில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக பேரணிகள், சத்தியாக்கிரகங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு செயற்பாடுகள் என்பவற்றை மேற்கொள்ள குறித்த கட்சிகள் தீர்மானித்துள்ளன.
அவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர மக்களின் ஆதரவை எதிர்க்கட்சிகளின் பால் பெற்றுக் கொள்வது அவர்களின் எதிர்பார்ப்பாகும்.
எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பு வெளிக்காட்டப்படும் சூழ்நிலையை எதிர்கொண்டாலும் மின்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் தனது முடிவை மீள்பரிசீலனை செய்யப்போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகர்கள்... எந்த ஜோடி பாருங்க Cineulagam

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
