நுவரெலியா தபால் நிலையத்தில் தொடர்ந்தும் வேலைநிறுத்தத்தில் ஊழியர்கள்
தபால் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணக் கோரி நான்காவது நாளாகவும் இன்று (21.08.2025) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நுவரெலியா பிரதான தபால் நிலையம் மூடப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சமூகமளிக்காத ஊழியர்கள்
இந்த நிலையில் தபால் நிலையத்திற்கு ஊழியர்கள் சமூகமளிக்காத நிலை காணப்படுகிறது.
இதனால் இன்று (21) தபால் நிலைய வளாகம் பொது மக்களின் நடமாட்டம் அற்று வெறிச்சோடிக் காணப்பட்டுள்ளது.
19 கோரிக்கைகளை முன்வைத்து, நாட்டின் அனைத்து தபால் நிலையங்களிலும் தபால் தொழிற்சங்கங்கள் 17ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கடும் சிரமம்
இந்த நிலையில், தபால் மூலம் சேவைகளைப் பெற உள்ளவர்கள் குறித்த வேலைநிறுத்தம் காரணமாக கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 18 மணி நேரம் முன்

619 விக்கெட் வீழ்த்திய ஜாம்பவானின் சாதனையை முறியடித்த ஜடேஜா! சச்சின், கோஹ்லியும் கூட இல்லை News Lankasri
