நுவரெலியா - கம்பளை பிரதான வீதி தற்காலிகமாக மூடல்: பாறைகள் சரிந்து விழும் அபாயம்
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் பல பெரிய பாறைகள் சரிந்து விழும் அபாயம் உருவானதைத் தொடர்ந்து, அவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியருகில் அபாயகர நிலையில் இருந்த ஒரு பெரிய பாறை பிரதான மார்க்கத்தில் விழுந்துள்ளது.
இதனுடன், கொத்மலை கெரண்டிஎல்லப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்திலிருந்து பல பெரிய பாறைகள் சரிந்து தோட்டப்பகுதிகளில் விழுந்துள்ளன.

போக்குவரத்து சீரமைக்கும் பணிகள்
இதில் மேலும் பிரதான வீதிக்குச் சரிந்து வரக்கூடிய அபாயம் நீடிப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைக்காக வீதி மூடப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். கெரண்டிஎல்லப் பிரதேசத்தில் பல இடங்களில் மண் மேடுகளும் சரிந்து விழுந்துள்ளன.
தற்போது அவை அகற்றப்பட்டு வீதி போக்குவரத்து சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வீதி மீண்டும் திறக்கப்படும் வரை வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam