நுவரெலியாவில் கடும் மழை : 16 குடும்பங்கள் இடம்பெயர்வு
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக இஸ்கிராப் தோட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன்காரணமாக, தாழ்நிலப் பிரதேசத்தில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இதில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ள நீர் முழுமையாக வீடுகளுக்குள் புகுந்ததால் வீடுகள் பாதிப்படைந்துள்ளன.
இதனால் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தோட்ட ஆலயத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பயிரிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் விவசாயிகளுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
