கொலைக் குற்றச்சாட்டுகளில் நால்வருக்கு மரண தண்டனை
நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மூன்று கொலை வழக்குகளின் தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய, நான்கு பிரதிவாதிகளுக்கு இன்று (02) மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
அதன்படி 1998ஆம் ஆண்டு நானுஓயா டெஸ்போட் பகுதியில் வைத்து டிக்கோயா பகுதியைச் சேர்ந்த 57 வயது நபர் ஒருவரை கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கும் போது லிந்துலை மெரயா தோட்டத்தை சேர்ந்த பொன்னம்பலம் சதீஷ் என்ற 47 வயது குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இறுதிக்கட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர்! குறிவைக்கப்பட்ட ஈரானின் எஞ்சிய பகுதி - தொடரும் அமெரிக்காவின் எச்சரிக்கை
இரு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை
மேலும் 2009ஆம் ஆண்டு பட்டிபொல பொலிஸ் பிரிவில் தனது தாய், மனைவி மற்றும் குழந்தையைக் கொலை செய்த குற்றத்திற்காக ஆர்.எம். சந்திரதிலக என்ற 55 வயது குற்றவாளிக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இவ்விரு வழக்குகளையும் நானுஓயா பொலிஸ் நிலைய அதிகாரி பி.எஸ். சுரங்கா (67946) விசாரித்து வந்துள்ளார்.
1990ஆம் ஆண்டில் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவில் முகமது சுமன் என்பவரைக் கொலை செய்த வழக்கில், ஒரே பகுதியைச் சேர்ந்த 64 வயதான வீரரத்ன மற்றும் 62 வயதான கருப்பைய அன்னாதுரை ஆகிய இரு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.