ஏழு பேரின் உயிரை பறித்த நானுஓய கோர விபத்து! குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட நிதியுதவி
கடந்த ஜனவரி 20ஆம் திகதி நானுஓயா – ரதெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் சேகரிக்கப்பட்ட 14 லட்சம் ரூபா நிதி உதவி இன்று குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கடந்த ஜனவரி 20ஆம் திகதி நானுஓயா – ரதெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 53 பேர் படுகாயமடைந்திருந்தனர்.
இதில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா இரண்டு லட்சம் ரூபா வழங்கப்பட்டது. இதில் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் வங்கிக் கணக்கில் கல்லூரியின் காப்புறுதி திட்டம் ஊடாக பெருந்தொகைப் பணமும் வைப்பிலிடப்பட்டது.
மற்றும் இறந்தவர்களின் திதி கொடுப்பதற்கான செலவையும் பாடசாலை சமூகம் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் நந்தன கலபொட, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர், பொலிஸ் நிலைய அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 22 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
