பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்கான உணவு: சீனா உதவி
பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்கான உணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சீனாவினால் 1,000 மெற்றிக் டன் அரிசி கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் 9 மாகாணங்களுக்கு உட்பட்ட 11 இலட்சம் மாணவர்களுக்காக ஒரு நேர போஷாக்கான உணவை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகவுள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் விஷேட உதவி
இந்த செயற்பாடானது மாணவர்களுக்கு வழங்கப்படும் விஷேட உதவி என இலங்கைக்கான சீன தூதுவர் சிங்ஹொங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
??Amb. Qi Zhenhong attended 1,000 MT rice hand-over ceremony at ?? Ministry of Education on 14th July. Children are the future of a country. China will try all-out efforts to sustain School Meal Program for at least 6 months & support #Srilankan people to tide over difficulties. pic.twitter.com/MjytZWobV6
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) July 15, 2022
சீன உணவு உதவி திட்டத்தின் கீழ் 10,000 மெற்றிக் டன் அரிசி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.
அதன் இரண்டாம் கட்ட அரிசி தொகுதியே பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.