இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்தது
இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக் கொண்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மிக வேகமாக நடந்து கொண்டிருப்பதாக கோவிட் தடுப்பு செயலணி அறிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் சினோபாம் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வரை தடுப்பூசி ஏற்றியோரில் சினோபாம் இரண்டு தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர்
சன்ன ஜயசுமன(Channa Jayasumana) தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
