உலகளவில் பட்டினியால் தவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்
உலகளவில் பட்டினியால் தவிப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் 'உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை' அறிக்கை தெரிவித்துள்ளது.
2025-ஆம் ஆண்டில் உலகளவில் 645 மில்லியன் மக்கள் பசியால் பாதிக்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இது 2024-ஆம் ஆண்டை விட 14 மில்லியனும், 2022ஆம் ஆண்டை விட 43 மில்லியனும் குறைவாக இருப்பினும், கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டின் நிலையோடு ஒப்பிடுகையில் பட்டினியின் அளவு இன்னும் அதிகமாகவே உள்ளது.
கடுமையான பஞ்சம்
உலகளவில் பசியால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக ஆப்பிரிக்க கண்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
சத்தான உணவு முறையைப் பெற முடியாத மக்களின் எண்ணிக்கை 2021இல் 2.97 பில்லியனாக இருந்தது, 2025-இல் 2.69 பில்லியனாகக் குறைந்துள்ளது. ஆனால் சத்தான உணவிற்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2025-ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி, ஒரு நபர் ஆரோக்கியமான உணவைப் பெற ஒரு நாளைக்கு சராசரியாக 4.28 டொலர் செலவிட வேண்டியுள்ளது.
ஆசியாவில் 1.4 பில்லியன் மக்களும், ஆப்பிரிக்காவில் 1.03 பில்லியன் மக்களும் ஆரோக்கியமான உணவைப் பெற முடியாத நிதி நெருக்கடியில் உள்ளனர். உலகளவில் சுமார் 1.4 மில்லியன் மக்கள் கடுமையான பஞ்சத்தின் விளிம்பில் தவித்து வருகின்றனர்.