இலங்கையில் உச்சம் தொட்ட கோவிட் தொற்றாளர்களின் அதிகூடிய எண்ணிக்கை
இலங்கையில் மேலும் 867 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் 1,913 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட்கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாளொன்றுக்கு பதிவான அதிகபட்ச கோவிட் நோயாளர்கள் இன்றைய தினம் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 113,618 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை கோவிட் தொற்றில் இருந்து 98,209 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
மேலும், கோவிட் தொற்றுக்குள்ளாகிய 696 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam