நாட்டில் தொடர்ச்சியாக கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 950 ஐ தாண்டியுள்ளது
ஒரே நாளில் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் - 19 நோய்த்தொற்றாளிகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று நாட்டில் பதிவான மொத்த கோவிட் -19 நோய்த்தொற்றாளிகளின் எண்ணிக்கை 963 ஆகும். அவற்றில் 940 பேர் பேலியஹொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்
சிறைச்சாலை கொத்தணியில் 15 பேரும் ஐக்கிய அரபு இராட்சியத்திலிருந்து வருகை தந்த எட்டு பேரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கோவிட் - 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 72,174 ஆகவும், சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை 65,644 ஆகவும் உள்ளது.
இதுவரை 6,155 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் மொத்த கோவிட - 19 இறப்புகளின் எண்ணிக்கை 375 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசெல குணவர்தன உறுதிப்படுத்தினார்.




